பத்தினி (அவள் - பகுதி 2)
- Galle Road Blogs
- Jun 5, 2020
- 1 min read
என்னவள் எனை நிதம் எண்ணியவள்
என் மனம் அதை நெருங்கியவள்
தேன் என என்னுள் திகட்டியவள்
தினம் தாயென வழிபட வேண்டியவள்
ஒரு மாயையை தன்னுள் அடக்கியவள்
ஒரு வேள்வியை நாவில் ஏற்றியவள்
பல சூழ்நிலை அதை தாங்கியவள்
மண்ணில் வேதனை கொண்ட விதவை அவள்
பல இரவுகள் தனிமையில் வாடியவள்
சூழும் இருட்டினில் ஏற்றிய தீபம் அவள்
புது உலகினை படைத்திட ஏங்கியவள்
தன் படைப்பினில் புதுமையை தூவியவள்
கண்ணகியாம் அவள் பத்தினியாம்
கொடுங்கோவத்தில் தீயென்று உதித் தெழுந்தாள்
பாரினிடை புது புரட்சி எழ
தன் நாவினால் மாயையை சுட்டெரித்தாள்.
இக்கவிதையின் முதல் பாகத்தை வாசிக்க அவள் - பகுதி 1 ஐ அழுத்தவும்.
எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்
Cover image source: https://in.pinterest.com/pin/479633429048653528/
Comments