மனிதம் - பகுதி 1
- Galle Road Blogs
- Jun 4, 2020
- 1 min read
Updated: Jun 5, 2020
யாதொரு குறையிலா மனிதன் எங்கே
மனம்தான் மருந்தென்று வாழ்பவன் இங்கே
விதையின்றி பிறக்காது மரமொன்று என்பர்
மரமின்றி விதையில்லை மறந்தாயோ நீ
மரியாதை அறியாத மனிதர்தான் அன்று
மரியாதை இழக்கின்ற மிருகம்தான் இன்று
உரமின்றி வளராது மரம்தான் இங்கு
மனிதன் தன் நேயத்தை மறந்தானோ இன்று
கறுத்தாலும், வெளுத்தாலும் உணர்வென்பது ஒன்றே
உன்னுள்ளே ஓடிய உதிரம் அழுக்காகும்
மதங்களும் இனங்களும் உனை எனை பிரித்தாலும்
பிரியாத உணர்வுகள் நமை ஒன்றாக்கும்.
எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்
Cover image by ArtTower from Pixabay
Comments